முகப்பு > இந்தியா

கலவர வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரகீமின் வளர்ப்பு மகள் ஒப்புதல்

October 13, 2017

கலவர வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரகீமின் வளர்ப்பு மகள் ஒப்புதல்


சாமியார் குர்மீத் ராம் ரகீமை கைது செய்த போது 36 பேரை பலிவாங்கிய கலவரத்தை தூண்டியதை அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டுள்ளார்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம், பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். குர்மீத் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த கலவரத்தை தூண்டியதாக, குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாக இருந்த ஹனிப்ரீத்தை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.  
விசாரணையில் ஹரியானாவின் பஞ்ச்குலாவில் கலவரத்தை தூண்டியதை ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டுள்ளார். 

மேலும் கலவரத்தை தூண்டுவதற்காக, பஞ்ச்குலாவின் வரைபடத்தை வைத்து, ஹனிப்ரீத், சாமியாரின் ஆதரவாளர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். இதற்காக ஆதரவாளர்களுக்கு, 1.25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்