இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்த பரிதாபம்!

January 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3744 Views

கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே, அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவில் இருந்து நேற்று இரவு தர்மஸ்தலாவுக்கு கர்நாடக அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை ஹாசன் மாவட்டம் கெரெக்கெரே பகுதியில் சென்றபோது, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி, அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  

எனினும், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 23 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே, விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் தம்மை தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே நக்சல்களுக்கும், பாதுகாப்பு

விமானப் போக்குவரத்துத்துறை மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தால்

வங்கிககளில் 900 கோடி கடன் பெற்ற Rotomac பேனா தயாரிப்பு நிறுவனத்தின்

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)