இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ரஃபேல் போர் விமானம் இந்தியாவுக்கு இன்றியமையாதது: இந்திய விமானப்படைத் தளபதி கருத்து!

September 12, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2666 Views

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதன் மூலம் இந்தியா தனது பாதுகாப்பை பலபடுத்திக்கொண்டுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி பிரேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. 

இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.  கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. 

இந்நிலையில், டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்று பேசிய பிரேந்திர சிங், நமது அண்டை நாடுகள் பலம் பொருந்தியிருக்கும் நிலையில், இது போன்ற போர் விமானங்கள் இந்தியாவிற்கு இன்றியமையாதது என தெரிவித்தார். 

கடந்த சில நாட்களாக ரஃபேல் போர் விமான விவகாரம் அரசியல் தளங்களில் பேசுப்பொருளாக இருக்கும் நிலையில் பிரேந்திர சிங்கின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )