இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள பெட்ரோல் விலை!

September 12, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1929 Views

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகிய காரணங்களை காட்டி பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 47 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 95 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பர்பாணி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாய் 11 காசுகளுக்கும், டீசல் 78 ரூபாய் 6 காசுகளுக்கும் விற்பனையானது. இந்தியாலேயே பர்பானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பதால், அங்குள்ள வாகன ஓட்டிகள் விழிபிதுங்கியுள்ளனர். 

இதனிடையே நடப்பாண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் ராஜஸ்தானில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆந்திராவில் வாட் வரி குறைக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை தலா 2 ரூபாய் குறைந்துள்ளது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையில் தலா ஒரு ரூபாய் குறைக்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியதாக தெரியவில்லை. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )