முகப்பு > இந்தியா

குழந்தைகள் இறந்தது குறித்து பிரதமரிடம் யோகிஆதித்யநாத் நேரில் விளக்கம்!

August 12, 2017

குழந்தைகள் இறந்தது குறித்து பிரதமரிடம் யோகிஆதித்யநாத் நேரில் விளக்கம்!


உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, குழந்தைகள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கும் நிறுவனம், பண நிலுவை காரணமாக கடந்த 5 நாட்களுக்கு முன் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திவிட்டது. இதனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. 

இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் BRD அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

 

சில சுவாரஸ்யமான செய்திகள்


தலைப்புச் செய்திகள்