முகப்பு > இந்தியா

மாநிலங்களவைக் குழுத்தலைவர் பதவியிலிருந்து சரத்யாதவ் திடீர் நீக்கம்!

August 12, 2017

மாநிலங்களவைக் குழுத்தலைவர் பதவியிலிருந்து சரத்யாதவ் திடீர் நீக்கம்!


கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஐக்கிய ஜனதாதள கட்சியின் மாநிலங்களவைக் குழுத்தலைவர் பதவியிலிருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக, மாநிலங்களவையில் தங்கள் கட்சியின் தலைவராக  ராம்சந்திர பிரசாத் சிங் செயல்படுவார் என ஐக்கிய ஜனதாதளம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடுவை சந்தித்து, இதற்கான கடிதத்தை அக்கட்சியின் நிர்வாகிகள் அளித்துள்ளனர்.

பீகாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததையடுத்து, நிதிஷ்குமாருக்கும், சரத்யாதவ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மத்தியில் பாஜக அமைச்சரவையில் ஜக்கிய ஜனதா தளம் இணைய வேண்டும் என, பாஜக தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள ஜக்கிய ஜனதா தள நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்