இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

March 12, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8018 Views

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு, டெல்லியிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்த நிலையில், சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையாக நிகழவில்லை, என்று உடற்கூறு சோதனை அறிக்கை கூறியது. 

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, டி.என்.ஏ. செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டுள்ளது. அதில், சுனந்தா புஷ்கரின் உடலில், 15 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், பற்களால் கடிக்கப்பட்ட தழும்பும், மரணம் அடைந்ததாகக் கூறப்படும் அன்று, புதிதாக ஊசி போட்டதற்கான தடயமும் இருந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனந்தா புஷ்கரின் உடலில் இருந்த காயங்கள் அனைத்தும், அவரது மரணத்திற்கு முன்பு, சுமார் 12 மணி நேரம் முதல், 4 நாட்களுக்குள் ஏற்படுத்தப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனந்தாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், வெளியாட்கள் நுழைய முடியாத டெல்லி நட்சத்திர ஓட்டலில், அவரை கொலை செய்தவர் யார், என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )