முகப்பு > இந்தியா

​இந்தியாவில் 90% பணியாளர்களின் பிரச்னைகளை நிறுவனங்கள் முறையாக கையாளவில்லை! - ஆய்வில் தகவல்

August 11, 2017

​இந்தியாவில் 90% பணியாளர்களின் பிரச்னைகளை நிறுவனங்கள் முறையாக கையாளவில்லை! - ஆய்வில் தகவல்இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை பற்றி ‘ஜாப் புஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் பதில் அளித்த பணியாளர்களின் கருத்துக்களைக் கொண்டு இந்தியாவில் பணியாளர்கள் மற்றும் நிறுவன தலைமைகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி ஆய்வு முடிவு  வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வின் படி, 25% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை சிறப்பாக செயல்படுவதாகவும், 35% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை நிறைவாக இருப்பதாகவும், 40% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமையின் மேலாண்மை மோசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் 40% பணியாளர்கள் தங்களது பணிக்கு தேவையான வசதிகள் இருப்பதாகவும், 60% பணியாளர்கள் தேவையான வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிறுவனத்தலைமை தங்களுடன் உரையாடும் விதத்தில் திருப்தி என்று 5% பேரும், தங்கள் நிறுவனம் தங்களோடு உரையாடும் விதத்தில் திருப்தி இல்லை என்று 95% பேரும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களது பிரச்சனைகளை நிறுவனம் சரியான முறையில் கையாள்கிறது என்று 10% பேரும், நிறுவனம் தங்களது பிரச்னைகளைக் கண்டுகொள்வதேயில்லை என்று 90% பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்திய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தும் விஷயமாக மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்ற பயிற்சியே முக்கியத்துவம் வகிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்