முகப்பு > இந்தியா

​அமித் ஷா வருகையின் போது அதிமுக, திமுக தலைவர்கள் பாஜகவில் இணைகிறார்கள்?

August 11, 2017

​அமித் ஷா வருகையின் போது அதிமுக, திமுக தலைவர்கள் பாஜகவில் இணைகிறார்கள்?பாஜக தலைவர் அமித் ஷா வரும் ஆகஸ்ட் 22ம் தேதி தமிழகம் வருகிறார். 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் அமித் ஷா 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் மற்றும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.

இந்த வருகையின் போது அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த சில முன்னணி தலைவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் குழப்பமான சூழல்களுக்கு மத்தியில் துண்டுகளாக கட்சி உடைந்திருக்கும் நிலையில் அக்கட்சியிலிருந்து சில முன்னணித் தலைவர்களை பாஜகவில் இணைக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு செல்ல இருப்பதாக ஆங்கில செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், திமுகவில் அதிருப்தியில் இருக்கும் சில தலைவர்களுக்கும் பாஜக சார்பில் வலைவீசப்படுவதாக சொல்லப்படுகிறது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்