இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மாநகரம்!

July 11, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1145 Views

கனமழையால் மும்பை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், புறநகர் ரயில் நிலையங்களில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில், கப்பற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மும்பையில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியுள்ள நிலையில், நகரம் முழுவதும் வெள்ளாக்காடாய் மாறியுள்ளது.

மும்பையின் தாழ்வான பகுதிகளான தாதர் இந்துமாதா, கிங்சர்க்கிள், மலாடு, அந்தேரி மிலன் சப்வே உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. வசாய் மிட்டாநகரை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதியில் வசித்துவரும் 300 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்,  மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி முன்னேற முடியாமல் நிற்கதியாய் நிற்கின்றன. 

மும்பையிலுள்ள மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, டோம்பிவிலி ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கிக்கிடப்பதால் தண்டவாளங்கள் கண்களுக்கு தெரியவில்லை. இதனால் புறநகர் ரயில்வே சேவையில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  தொலைதூரத்திலிருந்து மும்பைக்கு செல்லும் ரயில் நகரத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் மும்பைக்கு இயக்கப்படும் 70 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நல்லசோபரா ரயில் நிலையத்தில் கனமழை காரணமாக, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளை மீட்கும் பணியை கடற்படை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )