இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

கரையை கடந்து வரும் அதிதீவிர ''டிட்லி'' புயல்

October 11, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2483 Views

வங்கக் கடலில் உருவான ''டிட்லி'' புயல் ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்துக்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் 3 லட்சம் பேர் பாதுப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வங்கக் கடலில் உருவாகியுள்ள ''டிட்லி'' புயல், கலிங்கப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கரையை கடந்து வருகிறது. புயல் எதிரொலியாக ஒடிசா மாநிலத்தின் கஜபதி, கஞ்சம், புரி, கட்டாக் உட்பட 18 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோபால்பூரில் நேற்று இரவு முதலே சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மீட்பு பணி வீரர்களும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )