இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

நிர்பந்தம் எதுவுமின்றி இன்றி, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: டசால்ட் நிறுவனம் விளக்கம்

October 11, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
846 Views

ரஃபேல் போர் விமான உதிரிபாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ஒப்பந்தம் போட்டதாகவும் நிர்பந்தங்கள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றும் டஸால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் விமானக் கட்டுமான நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக 56 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் , ரஃபேல் போர் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டும் என டஸால்ட் நிறுவனம் நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள டஸால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்கள்தான் விரும்பித் தேர்ந்தெடுத்ததாகவும், இதில் எந்தவித நிர்பந்தமும் தங்களுக்கு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள் பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் சென்றுள்ளார். ரஃபேல் சர்ச்சை நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )