முகப்பு > இந்தியா

வரி ஏய்ப்பு செய்த 3 - 4 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளது : மத்திய அரசு

January 11, 2017

வரி ஏய்ப்பு செய்த 3 - 4 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளது : மத்திய அரசு


பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், கணக்கில் வராத டெபாசிட் பணம் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு பிறகு நடைபெற்றுள்ள பண டெபாசிட் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

நவம்பர் 8ஆம் தேதிக்கு பின்னர், டிசம்பர் 30ஆம் தேதிக்குள், வங்கிகளில் 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வருமானம், டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு   நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

சுமார் 60 லட்சம் வங்கி கணக்குகளில் 2 லட்சத்திற்கும் மேல் செல்லாத நோட்டு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செல்லாத நோட்டுகள் மூலம் மக்கள் செலுத்தியுள்ளதாகவும், பரிவர்த்தனை இல்லாத கணக்குகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு பின் 4 லட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும்,  கூட்டுறவு வங்கிகளின் பல்வேறு கணக்குகளில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கணக்கில் வராத டெபாசிட் பணம் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்