முகப்பு > இந்தியா

​எல்லை பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் மீது திடுக்கிடும் புகார்..!

January 11, 2017

​எல்லை பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் மீது திடுக்கிடும் புகார்..!


எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பொருட்களை, அதிகாரிகள் பாதி விலைக்கு விற்பதாக வெளியான தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லை பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் என்பவர், தங்களுக்கு சரியான உணவு அளிப்பதில்லை என சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

அது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளின் ஊழல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வீரர்களுக்காக கொண்டுவரப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் சிலர், தங்களுக்கு பாதி விலையில் தருவதாக ஹம்ஹாமா முகாமுக்கு அருகிலுள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இதேபோல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களையும் அதிகாரிகள் பாதி விலைக்கு விற்பதாக, கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், அலுவலகத்துக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும்போது, அதற்கு அதிகாரிகள் அதிகப்படியான கமிஷன் வாங்குவதாகவும், பொருட்களின் தரத்தைப் பற்றி அதிகாரிகள் கவலைப்படுவதில்லை என்றும், ஃபர்னிச்சர் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மீதான அடுக்கடுக்கான புகார்கள், இந்திய பாதுகாப்புப் படைக்கு தலைக்குனிவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்