முகப்பு > இந்தியா

​காஷ்மீர் இந்தியாவிடம் இருந்து பிரிந்துவிடுமோ என்ற அச்சத்தை கைவிட வேண்டும்: மெகபூபா முஃப்தி

January 11, 2017

​காஷ்மீர் இந்தியாவிடம் இருந்து பிரிந்துவிடுமோ என்ற அச்சத்தை கைவிட வேண்டும்: மெகபூபா முஃப்தி


காஷ்மீர் இந்தியாவிடம் இருந்து பிரிந்துவிடுமோ என்ற அச்சத்தை பாரதிய ஜனதா கட்சி கைவிட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

மாநில சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், இவ்வாறு கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 370 குறித்த பாரதிய ஜனதா கட்சியின் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், பிளவை ஏற்படுத்தும் சட்டப்பிரிவாக அதனைக் கருதாமல், இணைக்கும் கருவியாக அதனை பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இந்தியாவின் ஒரு அங்கமாக காஷ்மீர் இருந்தாலும், அது உணர்வுப்பூர்வமாக இருக்கவில்லை எனத் தெரிவித்த மெகபூபா முஃப்தி, உணர்வுப்பூர்வமாக காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என குறிப்பிட்டார். 

கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்த அவர், அதற்கு முன்பாக, இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவருக்கு உள்ள அச்சத்தை போக்கிக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தார். 

சட்டப்பிரிவு 370வை நீக்கி விடுமோ என்ற அச்சம் மத்திய அரசின் மீது தங்களுக்கும், காஷ்மீர் பிரிந்துவிடுமோ என்ற அச்சம் பாரதிய ஜனதாவுக்கும் இருப்பதாக மெகபூபா முஃப்தி கூறினார். இந்த அச்சத்தில் இருந்து விடுபடுவது இருவருக்கும் நல்லது என்றும் அவர் தெரிவித்தார். 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்