முகப்பு > இந்தியா

சமாஜ்வாதி கட்சி பிளவுபடுவதை அனுமதிக்க மாட்டேன் என முலாயம் சிங் உருக்கம்!

January 11, 2017

சமாஜ்வாதி கட்சி பிளவுபடுவதை அனுமதிக்க மாட்டேன் என முலாயம் சிங் உருக்கம்!


எத்தகைய பிரச்னைகள் வந்தாலும், சமாஜ்வாதி கட்சி பிளவுபடுவதை அனுமதிக்க மாட்டேன் என தொண்டர்களிடையே முலாயம் சிங் உருக்கமாக உரையாற்றியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியில் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற இருதரப்பினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே முலாயம் சிங் இன்று உரையாற்றினார் அப்போது, கட்சியில் தான் ஒற்றுமையை விரும்புவதாகவும், எதிர்தரப்பினர் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதிய கட்சி தொடங்கும் திட்டம் தமக்கு இல்லை என்றும், கட்சி சின்னத்தை மாற்றிக் கொள்ளும் முயற்சியும் இல்லை என்றும், முலாயம் சிங் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். 

அகிலேஷ் யாதவ் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது, தான் கட்சி தொடங்கியதாகவும், அகிலேஷ் யாதவ் கேட்ட அனைத்தையும் தான் கொடுத்திருப்பதாகவும், அவருக்கு கொடுக்க தன்னிடம் தற்போது எதுவும் இல்லை என்றும் உருக்கமாக பேசினார். 

மேலும், தேர்தலில் வென்றால் மீண்டும் அகிலேஷ் தான் முதலமைச்சர் என்றும் குறிப்பிட்டார். எத்தகைய விலை கொடுத்தாவது கட்சி பிளவுபடுவதை தடுப்பேன் என்றும் முலாயம் சிங் பேசினார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்