முகப்பு > இந்தியா

​ஜல்லிக்கட்டு தொடர்பாக குடியரசுத்தலைவருக்கு மார்கண்டேய கட்ஜூ கடிதம்

January 11, 2017

​ஜல்லிக்கட்டு தொடர்பாக குடியரசுத்தலைவருக்கு மார்கண்டேய கட்ஜூ கடிதம்


ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், மிருகவதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து உடனடியாக அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழி ஏற்படும் எனக் கூறியுள்ள அவர், அதே நேரத்தில் காளைகள் துன்புறுத்தப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 

காளைகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ள மார்கண்டேய கட்ஜு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டை விரும்பும் மக்களின் சார்பில் இக்கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறியுள்ளார். 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்