முகப்பு > இந்தியா

தெலுங்கானாவில் நாளை தொடங்குகிறது சர்வதேச காற்றாடி திருவிழா!

January 11, 2017

தெலுங்கானாவில் நாளை தொடங்குகிறது சர்வதேச காற்றாடி திருவிழா!


தெலுங்கானாவில் விவசாய திருவிழாவான மகர சங்ராந்தியுடன் சேர்த்து சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறுகிறது.

நாளை தொடங்கும் காற்றாடி திருவிழா, 17ம் தேதி வரை தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. பெண் குழந்தைகள் முன்னேற்றம் மற்றும் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காற்றாடி திருவிழா நடைபெற உள்ளதாக விழாகமிட்டி அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் நாளை இரவு தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது. 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஹைதராபாத்திலும், யதாத்ரி மாவட்டத்தில் 16ம் தேதியும், வாராங்கல் மாவட்டத்தில் 17ம் தேதியும் காற்றாடி திருவிழா நடைபெறுகிறது.

17 நாடுகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட காற்றாடி விடுபவர்களும், இந்தியாவில் இருந்து 40 பேரும் விழாவில் பங்கெடுக்கின்றனர். 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காற்றாடி திருவிழாவை காண திரள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்