முகப்பு > இந்தியா

ஆதார் பெற விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

January 11, 2017

ஆதார் பெற விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பு மற்றும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை தொடர்ந்து, ஆதார் பெற விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரத்தில், ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதம் ஒரு கோடியே 20 லட்சமாக இருந்ததாகவும், கடந்த நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக குறைந்ததாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், கடந்த மாதம் ஆதார் கோரி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே 36 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதார் அட்டை பெற விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள உயரதிகாரி ஒருவர், தற்போதைய நிலையில் 110 கோடி 
பேருக்கு ஆதார் அட்டை கிடைத்துள்ளதாக கூறினார். 

ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து மக்கள் வங்கிகளின் சேவையை அதிகளவில் நாடுவதால், ஆதார் அட்டையின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்