முகப்பு > இந்தியா

​தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் பொறுத்துக் கொள்ள முடியாது: தேர்தல் ஆணையம்

January 11, 2017

​தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் பொறுத்துக் கொள்ள முடியாது: தேர்தல் ஆணையம்


தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் பொறுத்துக் கொள்ள முடியாதென தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலையொட்டி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தேர்தல் பார்வையாளர்கள் கவனிக்க வேண்டும் என்றும், ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விதிமீறல்கள் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்