இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

மும்பை: ஓடும் ரயிலில் கீகீ சேலஞ்ஜில் ஈடுபட்ட இளைஞர்கள் மூன்று பேர் கைது!

August 10, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1047 Views

மும்பை: ஓடும் ரயிலில் கீகீ சேலஞ்ஜில் ஈடுபட்ட இளைஞர்கள் மூன்று பேர் கைது; ரயில் நிலையத்தை சுத்தம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட நீதிமன்றம் உத்தரவு.

மும்பை புறநகர் ரயிலில் கீகீ சேலஞ்ச் செய்த யூ-டியூப் சேனல் நடத்தும் இளைஞர்கள் 3 பேரை, ரயில் நிலையத்தை சுத்தம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் 3 இளைஞர்கள், கிகி சேலஞ்சிற்காக மும்பை புறநகர் ரயிலில் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டனர். ஓடும் ரயிலில் அந்த இளைஞர்கள் செய்த கீகீ சேலஞ்ச் வீடியோ இணையத்தில் வைரலானது.

வைரலான வீடியோவைக் கண்ட போலீசார், விதிகளை மீறி ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்ததற்காக மூவரையும் கைது செய்தனர். ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, மூன்று நாட்கள் ரயில் நிலையத்தை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )