இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10% அளவிற்கு எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயம்!

August 10, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
812 Views

வரும் 2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10 சதவீதம் அளவிற்கு எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சர்வதேச உயிரி எரிபொருள் தினத்தை முன்னிட்டு உயிரி எரிபொருள் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயிரி எரிபொருள் வல்லுனர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, வரும் 2022ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் அளவிற்கும் 2030ம் ஆண்டிற்குள் 20 சதவீதம் அளவிற்கும் பெட்ரோலில் எத்தனாலைக் கலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலுக்காக அனைத்து வகையான வேளாண் கழிவுகளும் பயன்படுத்தப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, இதன் மூலம் வேளாண் பண்ணைகளில் கழிவுகள் அதிகம் அளவு சேர்வது தவிர்க்கப்படும் என்றும் இந்த திட்டத்தால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )