முகப்பு > இந்தியா

பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை

January 10, 2017

பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை


பொங்கல் பண்டிகை அன்று, மத்திய அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய விடுமுறை தினங்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு பொங்கல் பண்டிகையை நேற்று நீக்கியது. மாறாக, விருப்ப விடுமுறை பட்டியலில் அது சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், பொங்கல் பண்டிகையை மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.

மேலும், கட்டாய விடுமுறையில் இருந்த தசரா பண்டிகை, விருப்ப விடுமுறை பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் பண்டிகையைச் சேர்க்கக் கோரி,  முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்,  அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியியது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்