முகப்பு > இந்தியா

​இலாக்கா பேரம் பேசுவதற்கு மட்டுமே ரயில்வேதுறையை பயன்படுத்தியது காங்கிரஸ்: பிரதமர்

January 10, 2017

​இலாக்கா பேரம் பேசுவதற்கு மட்டுமே ரயில்வேதுறையை பயன்படுத்தியது காங்கிரஸ்: பிரதமர்


முந்தைய ஆட்சி காலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு வலை விரிப்பதற்காகவே ரயில்வே துறையை காங்கிரஸ் கட்சிப் பயன்படுத்தி வந்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

குஜராத்தில் காந்திநகர் ரயில் நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற இலாக்கா பேரம் பேசுவதற்காக மட்டுமே முந்தைய ஆட்சி காலங்களில் ரயில்வேத்துறை பயன்படுத்தி வந்ததாகக் கூறினார். 

ஆனால் அந்த நிலையை மாற்றி ரயில்வே துறையை வளர்ச்சிப் பாதையில் செல்ல வைத்தது பாஜக அரசுதான் என்று கூறிய மோடி, பயணிகளின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுத்துவருவதாகத் தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நாட்டின் முதல் சர்வதேச பங்குச் சந்தையை காந்தி நகரில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தகவல் தொழில் நுட்பத்திலும், நிதித்துறையிலும் உலகிற்கே இந்தியர்கள்தான் முன்னோடி எனக் கூறினார். 

உலகில் அதிவேகமாக இயங்கும் பங்குச் சந்தைகளில் ஒன்றாக காந்தி நகர் சர்வதேச பங்குச் சந்தை விளங்கும் என்றும் மோடி கூறினார்.

காந்தி நகரில் சர்வதேச வர்த்தக கண்காட்சியையும்  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 80 நாடுகளைச் சேர்ந்த 1,500 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தங்கள் ஸ்டால்களை அமைத்துள்ளன. 5 நாட்களில் ஒன்றரை கோடி பேருக்கும் மேல் இந்த கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்