முகப்பு > இந்தியா

பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மோடி அறிவிப்பு!

January 10, 2017

பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மோடி அறிவிப்பு!


பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்வது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற வைபரண்ட் குஜராத் நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, அரசியலும், பொருளாதாரமும் ஊழலற்றதாக இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். 

வர்த்தகம் செய்ய விரும்புபவர்களுக்கு உள்ள சிரமத்தைப் போக்கவும், வர்த்தகத்திற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

அரசின் முயற்சிகளால், நாட்டின் பொருளாதாரக் குறியீடுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறிய நரேந்திர மோடி, உலகின் நம்பிக்கை அளிக்கும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். 

நல்லாட்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகக் கூறிய நரேந்திர மோடி, பொருளாதார சீர்திருத்தங்களை அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என கூறினார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்