முகப்பு > இந்தியா

​தடையை மீறி சபரிமலை செல்வது உறுதி - திருப்தி தேசாய் அறிவிப்பு

January 10, 2017

​தடையை மீறி சபரிமலை செல்வது உறுதி - திருப்தி தேசாய் அறிவிப்பு


தடையை மீறி, வரும் 25ம் தேதிக்குள் சபரிமலைக்கு செல்வது உறுதி என பெண்ணிய செயல்பாட்டாளர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

மகளிர் நல ஆர்வலரான திருப்தி தேசாய், மகாராஷ்டிர மாநிலம், சனிசிங்னாபூர் கோயில் கருவறை, மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவின் கருவறைக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கக் கோரி சட்ட ரீதியில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். தற்போது, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

யார் தடுத்தாலும் வரும் 25ஆம் தேதிக்குள் சபரிமலை செல்வது உறுதி என்றும் யாருக்கும் அஞ்சப் போவதில்லை என்றும் திருப்தி தேசாய் கூறியுள்ளார். தன்னுடன் மும்பை மற்றும் கேரளாவை சேர்ந்த 100 ஆதரவாளர்களும் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சபரிமலைக்கு அஹிம்சை வழியில் செல்ல தீர்மானித்துள்ளதாகவும், தான் செல்வதால் சட்டம் ஒழுங்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் திருப்தி தேசாயை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கேரள அரசும் தெரிவித்துள்ளது. 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்