முகப்பு > இந்தியா

“ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவருவது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது” : மத்திய அரசு

January 10, 2017

“ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவருவது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது” : மத்திய அரசு


ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தவே, இந்த விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அரசு எந்த முடிவையும் இப்போதைக்கு எடுக்க முடியாது என தெரிவித்தார். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும், அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என கூறிய அனில் தவே, அதேநேரத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்பது உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதது அல்ல என கூறினார். 

இந்த விவகாரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்