முகப்பு > இந்தியா

ரேன்சம்வேர் வைரஸ் சம்பாதித்த தொகை வெறும் 55 லட்சமா?

May 18, 2017

ரேன்சம்வேர் வைரஸ் சம்பாதித்த தொகை வெறும் 55 லட்சமா?


'wannacry ransomware' வைரஸ் இதுவரை சம்பாதித்த தொகை வெறும் 55 லட்சம்தான் என பிரிட்டனை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி பன்முனை சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். இதுவரை 4 லட்சம் கணினிகளுக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை’ குறிவைத்து தாக்கும் இந்த வைரஸின் முக்கிய நோக்கமே, கணினிகளை முடக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான். 

இதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் ‘cryptocurrency’ முறையின் மூலம் தான் கேட்கும் பணத்தை இணைய வழியாக அனுப்பி வைக்கும்படி கேட்கும். அனுப்பாதபட்சத்தில் கணினியில் இருக்கும் தகவல்களை அழித்துவிடும் அல்லது தானே எடுத்து பயன்படுத்திக்கொள்ளும். இதையடுத்து கணினியில் முக்கிய ஆவணங்கள் வைத்திருந்த பலரும் ரான்சம் வைரஸ் கேட்ட பணத்தை ஆன்லைனில் அனுப்பத்தொடங்கனர்.

'Bitcoin' எனப்படும் டிஜிட்டல் கட்டண முறைப்படியே ‘wannacry Ransomeware' வைரஸ் பணத்தை பெற்றுவந்தது. இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த ‘Elliptic’ எனும் மென்பொருள் நிறுவனம், ரேன்சம் வைரஸின் ‘bitcoin' முகவரியை கண்டுபிடித்து அதன் மூலம் பரிமாறப்பட்டுள்ள பணத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ‘wannacry ransomware' கணக்கில் வெறும் 55 லட்சம் ரூபாய்தான் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த இணையவாசிகள் ‘வெறும் 55 லட்சம் ரூபாய்க்காகவா உலக நாடுகளை இப்படி வாட்டி வதைக்க வேண்டும்’ என புலம்பி வருகின்றனர். எனினும் ரேன்சம் வைரஸை உருவாக்கியவர்கள் தங்களுடைய bitcoin கணக்கில் இருந்து பெரும் தொகையை வேறு கணக்கிற்கு மாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்