முகப்பு > இந்தியா

இந்திய அணிக்கு ஆதரவு தராதவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லுங்கள்: அர்னாப்

June 18, 2017

இந்திய அணிக்கு ஆதரவு தராதவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லுங்கள்: அர்னாப்


பாகிஸ்தான் கிரிகெட் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் காஷ்மீர் மக்கள் இரண்டு நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கே சென்றுவிடுங்கள் என அர்னாப் கோஸ்வாமி தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடிவருகிறது. உலக கிரிகெட் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியை ஆவலுடன் பார்த்துவருகின்றனர். கடந்த 14ம் தேதி நடந்த இத்தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியினர் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து காஷ்மீரின் சில பகுதிகளில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். காஷ்மீர் பிரிவினைவாதத்தை முன்வைக்கும் கட்சிகளின் கூட்டமைப்பான APHC யின் நிறுவனர் மிர்விஸ் உமர் ஃபாரூக் பாகிஸ்தான் அணிக்கு தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் மூலமாக தெரிவித்தார்.

இந்நிலையில், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநரும் பிரபல ஊடகவியலாளருமான அர்னாப் கோஸ்வாமி, ‘ பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் 2 நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கே கிளம்பி சென்று விடுங்கள்’ என கருத்து தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களி வைரலாக பரவிவருகிறது. 
 

அதில், “ இந்தியாவில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கு குறிப்பாக காஷ்மீர் மக்கள், இந்திய அணிக்கு மட்டும்தான் தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள் அனைவரும் உடனே பாகிஸ்தானுக்கு கிளம்பி சென்றுவிடுங்கள்.இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் உமர் ஃபரூக், இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடப்போகிறது, அதற்குள் உமர் ஃபரூக் தன்னுடைய மனநிலையை மாற்றுக்கொள்ள வேண்டும், இல்லையேல் அவர் பாகிஸ்தானுக்கு மூட்டை கட்ட வேண்டும்” என அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அர்னாப் கோஸ்வாமியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும்தான் எனவும், தாங்கள் விரும்பும் எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது எனவும் கிரிகெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.மேலும், அர்னாப் பேசிய வீடியோ காட்சிகளை வீடியோ மீம்ஸாக தயார் செய்து அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்