இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

சமூக வலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது: மத்திய அரசு தகவல்!

August 3, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5772 Views

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல்களில் பொதுமக்கள் பகிரும் தகவல்களை ஆய்வு செய்வதற்காக, சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.  இதனை எதிர்த்து, சமூக ஆர்வலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான மவா மொய்த்ரா, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

சமூக ஊடக மையத்தின் கண்காணிப்பு பணிகளுக்காக, ஒரு மென்பொருள் உருவாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் சமூக வலைதளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த மத்திய அரசு விரும்புகிறதா என கேள்வி எழுப்பினர்.  

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )