​ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.12,000 கோடி இழப்பு! | Bharti Airtel loses Rs 12,000 crore in m-cap as Jefferies says Jio’s postpaid offer to dent ARPU’s | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​ஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.12,000 கோடி இழப்பு!

May 11, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
12866 Views

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் அதன் போட்டி நிறுவனமான ஏர்டெல், 12,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது.

தொலைத்தொடர்ப்புத் துறையில் கோலோய்ச்சி வந்த ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் Postpaid திட்டத்தினை நேற்று அறிவித்தது.

199 ரூபாய் மாதாந்திர திட்டத்தில் சர்வதேச அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா என்ற கட்டணத்தில் மேற்கொள்ளலாம் என்ற ஜியோவின் அறிவிப்பு வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இதுவரையில் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களை மட்டுமே கவர்ந்து வந்த ஜியோ, இனி இதர நெர்வொட்குகளை பயன்படுத்தும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களையும் கவர்ந்து இழுக்க உள்ளது.

இந்நிலையில், ஜியோவின் அறிவிப்பு இன்று பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சந்தை தொடங்கியதும் ஏர்டெல் மற்றும் ஐடியாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. நேற்று மும்பை பங்குச்சந்தை முடிந்த நேரத்தில் 412.25 ஆக இருந்த ஏர்டெல்லின் பங்கு மதிப்பு இன்று 381.2 ஆக சரிந்தது.

நேற்று பங்குச்சந்தையில் 1,64,793 கோடி ரூபாயாக இருந்த ஏர்டெல்லின் மூலதனமதிப்பு, இன்று 1,52,421 கோடிகளாக சரிந்துள்ளது. இதன் மூலம் 12,372 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது. 

இதே போல ஐடியா நிறுவனத்தின் பங்குகளின் விலை கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக 12.85% அளவுக்கு சரிந்துள்ளது.

ஏர்டெல்லின் 199 ரூபாய் மாதாந்திர போஸ்ட்பெய்ட் திட்டம் வரும் மே 15ஆம் தேதியன்று அமலுக்கு வருகிறது. இதில் சேரும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு காப்புத் தொகையும் செலுத்தத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எல்லையற்ற வாய்ஸ் கால்கள், மெசேஜ்கள், 4ஜி வேகத்தில் 25 ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )