இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

போர்க்கொடி தூக்கிய கிரிக்கெட் வீரர்கள்; என்ன செய்யப் போகிறது பிசிசிஐ?

October 8, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11506 Views

இந்திய கிரிக்கெட் அணியில் தங்களுக்கான இடம் சரியாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முரளி விஜய்யும், கருண் நாயரும் எழுப்பியுள்ள நிலையில் அது குறித்து விவரமாக காண்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜீவா திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் ஒரு காட்சியில் நாயகனும் அவர் நண்பனும் வாய்ப்பு கிடைக்காத கோபத்தில் அணியின் நிர்வாக அலுவலகத்தில் சென்று பிரச்சனை செய்வது போன்ற காட்சி வரும். இப்போது அது போன்றதொரு காட்சி நிஜத்தில் நடந்திருக்கிறது. 

கருண் நாயரும், முரளி விஜய்யும் அணியில் தங்களுக்கான இடம் சரியான முறையில் வழங்கப்படவில்லை என போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்களுக்கான தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய முரளி விஜய்க்கு அடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

முரளி விஜய் சிறப்பாக செயல்படாததன் காரணமாக அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து தொடரில் யாருமே சிறப்பாக செயல்படாத போது தனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை என்ற வகையிலான கேள்வியை முரளி விஜய் எழுப்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முரளி விஜய் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னொரு பக்கம் கருண் நாயரின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்ற கருண்நாயர் ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணிலிருந்து கருண் நாயரும் நீக்கப்பட்டுள்ளார். முரளி விஜய் சரியாக விளையாடவில்லை என்பதற்காக நீக்கப்பட்டார் என்றால், விளையாட வாய்ப்பே அளிக்கப்படாத கருண்நாயர் ஏன் நீக்கப்பட்டார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக சேவக்கிற்கு பிறகு முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது டெஸ்ட் அணியில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டது குறித்தும் அதற்கான காரணங்கள் சரியான முறையில் சொல்லப்படாதது குறித்தும் முரளி விஜய்யும், கருண் நாயரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் விவாதத்திற்குரியது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். 

கேப்டன் விராத் கோஹ்லி வீரர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். அவர் கேப்டனான பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் அணி மாற்றத்திகு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எந்த வீரரும் ஒரே போட்டியில் ஜொலிக்க மாட்டார்கள் என்பதை அணி நிர்வாகம் உணர வேண்டும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். 

 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )