இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது

October 30, 2018 Posted By : manoj Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5442 Views

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குடன் திருமணம் நடைபெற்றது. பிறகு டென்னிஸ் போட்டிகளில் பிசியாக விளையாடி வந்த சானியா கலப்பு இரட்டையர் போட்டிகளில் கலக்கி வந்தார். அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அவரும், அவரது கணவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து சானியாவின் கணவர் சோயப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள அவர், கடவுளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். சானியா மிர்ஸாவிற்கும், சோயப் மாலிக்கிற்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த செய்தி #BabyMirzaMalik | #SaniaMirza என்று ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )