இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அசத்தல்!

August 3, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5109 Views

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். 

முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி, 2வது நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்தது. எனினும் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி, 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 20 ரன்களும், தவான் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனால் இந்திய அணி 59 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய கோலி, சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் கோலி அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். 

149 ரன்கள் எடுத்த போது கோலி ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி- உமேஷ் யாதவ் ஜோடி 57 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சேம் குர்ரன் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
 
முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் அலெஸ்டைர் குக், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போதைய நிலையில், இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 22 ரன்கள் முன்னிலையில் பெற்றுள்ளது.


 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )