முகப்பு > இந்தியா

​பி.வி.சிந்து வெள்ளி, சாய்னா வெண்கலம்! நூலிழையில் தங்கம் மிஸ்ஸிங்!

August 27, 2017

​பி.வி.சிந்து வெள்ளி, சாய்னா வெண்கலம்! நூலிழையில் தங்கம் மிஸ்ஸிங்!ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பெண்கள் தனிநபர் பேட்மிட்டன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சிந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இறுதிப்போட்டியில் சிந்துவும், ஜப்பானின் நொழாமி ஒகுஹராவும் விளையாடினார். மூன்று செட்களில் முதல் செட்டில் சிந்து - நொழாமி முறையே 19-21 என்ற கணக்கில் நொழாமி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் அசத்தலாக விளையாடிய சிந்து 22-20 என்கிற கணக்கில் செட்டை கைப்பற்றினார். மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது செட்டை நொழாமி 20-22 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன்மூலம், மிகக்கடுமையான போராட்டத்திற்கு பிறகு நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார் சிந்து. இதன் உலகக்கோப்பை பேட்மிட்டனில் சிந்து வெள்ளி பதக்கம் வென்றா. முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் தோற்றிருந்த சாய்னா நாவல் வெண்கலப்பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்