முகப்பு > இந்தியா

​தோனியின் ஓய்வுத்திட்டம்!

August 26, 2017

​தோனியின் ஓய்வுத்திட்டம்!மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நட்சத்திர ஹோட்டல்கள் கட்டவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 300 கோடி ரூபாய் அவர் முதலீடு செய்யவுள்ளதாகவும், சுமார் 500 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நட்சத்திர ஹோட்டல்கள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கபபட்டுள்ளது.
2011ம் ஆண்டு, 2015ம் ஆண்டு என இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் அணியை வழிநடத்திச் சென்று மிகச்சிறப்பான வெற்றிகளை குவித்த தோனி 2019ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்