முகப்பு > இந்தியா

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!

August 25, 2017

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!


இந்தியா - இலங்கைக்கு இடையே நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கையின் பல்லக்கெலே மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடியது. சமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரின் ஆட்டத்தால் அணியின் ரன்கள் 200-ஐ கடந்தது. இதையடுத்து 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை எடுத்தது இலங்கை அணி.

இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 109 ரன்களை சேர்த்தனர். இந்நிலையில், 16வது ஓவரில் ரோஹித் ஷர்மா தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலேயே தவானும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி தடுமாறத்தொடங்கியது.

இதன் பின்பு ஜோடி சேர்ந்த் தோனியும், புவனேஷ்வர் குமார் நிதானமான ஆட்டத்தை கையாண்டு ரன்களை குவிக்கத்தொடங்கினர். இதனிடையே மழை குறுக்கிட்டதால் இந்திய அணியின் இலக்கு 231 ரன்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் இந்திய அணி  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 236 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்