முகப்பு > இந்தியா

​தோனியின் இந்த வார உலக சாதனை!

August 25, 2017

​தோனியின் இந்த வார உலக சாதனை!ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்  அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில் இலங்கையின் குமார சங்ககராவின் உலக சாதனையை டோனி சமன் செய்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககரா 404 ஒருநாள் போட்டிகளில் 99 ஸ்டம்பிங் செய்து முதல் இடத்தில் இருந்தார்.
நேற்று பல்லேகலேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில், இலங்கை தொடக்க வீரர் குணதிலகா 19 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில், ஸ்டம்பிங் மூலம் டோனி வெளியேற்றினார். இதன்மூலம் 99 ஸ்டம்பிங் செய்து சங்ககராவுடன் உலக சாதனையை டோனி பகிர்ந்துள்ளார்.

இதுவரை டோனி 299 போட்டிகளில் 99 பேரை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கியுள்ளார். இன்னும் ஒரு ஸ்டம்பிங் செய்தால் புதிய உலக சாதனையை டோனி படைப்பார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்