முகப்பு > இந்தியா

இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

June 18, 2017

இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!


சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில்  இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் களம் இறங்கி விளையாடி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 

பாகிஸ்தான் தரப்பில் அசார் அலி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து அடித்து ஆடிய ஃபக்கார் ஸமான் 114 ரன்கள் எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இந்நிலையில், பாண்டியாவின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஃபக்கார் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தனர். 

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை பறி கொடுத்தது. ரன் எதுவும் எடுக்காமல் ரோகித் ஷர்மா ஆட்டமிழந்த நிலையில், முகமது அமீரின் பந்து வீச்சில் மூன்றாவது ஓவரில் விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத்தொடர்ந்து, ஷிகர் தவான், யுவராஜ் சிங், தோனி , ஜாதவ் ஆகியோர் சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் கடந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 43 பந்துகளுக்கு 76 ரன்கள் குவித்த பாண்டியா ரன் அவுட் ஆனார். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. இதன் பிறகு இந்தியாவின் ஆட்டம் வெகுநேரம் நீடிக்கவில்லை. அடுத்தத ஓவர்களில் ஜடேஜா 15 ரன்களுக்கும்  அஸ்வின் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் பந்துவீச்சை சந்திக்க வாய்ப்பின்றி பும்ரா ஒரு ஓவர் தாக்குப்பிடித்தாலும் அதற்கடுத்த ஓவரில் ஹசன் அலி வீசிய பந்தில் பும்ரா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

 

சில சுவாரஸ்யமான செய்திகள்


தலைப்புச் செய்திகள்