முகப்பு > இந்தியா

​இதுவரை பார்த்தது தோனியின் ட்ரைலர் - இனி தான் ஆட்டம் - ரவிசாஸ்திரி புகழாரம்!

September 14, 2017

​இதுவரை பார்த்தது தோனியின் ட்ரைலர் - இனி தான் ஆட்டம் - ரவிசாஸ்திரி புகழாரம்!2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்திய அணியில் தோனி தொடர்ந்து விளையாடுவார் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு எதிரான தொடரில் தோனி வெளிப்படுத்திய ஆட்டம் ஒரு டிரைலர் போன்றது தான் எனவும், இனிமேல் தான் அவரது நிஜ ஆட்டம் துவங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார் . 

தோனியின் ஓய்வுத்திட்டங்கள் பற்றியும் அவரது எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் ரவிசாஸ்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்மூலம், 2019 உலகக்கோப்பை வரை தோனியின் வாய்ப்பு பறிக்கப்படாது என்பதையே சாஸ்திரி சூசகமாக தெரிவித்துள்ளார்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்