முகப்பு > இந்தியா

​கோலியின் சாதனைகள் வியப்புக்குரியது - ஆஸ். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்

September 11, 2017

​கோலியின் சாதனைகள் வியப்புக்குரியது - ஆஸ். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்இந்தியஅணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர், சவாலானதாக இருக்கும் எனஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய அணியின் கேப்டன் கோலி மிகச்சிறந்த வீரர் எனவும், ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் வியப்புக்குரியது என்றும் பாராட்டினார். 

இந்த தொடரில் கோலியை பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் தடுக்க முடியும் என நம்புவதாக கூறிய ஸ்மித், அதை தாங்கள் சரியாக செய்தால் தொடரை தங்களுக்கு சாதகமாக்க முடியும் என தெரிவித்தார். 

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்