இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

​ஐபிஎல் போட்டி: பெங்களூரு, கொல்கத்தா அணிகள் வெற்றி!

May 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3212 Views

ஐபிஎல் சீசனில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் வெற்றிப்பெற்றன.

பெங்களூரு-டெல்லி அணிகள் மோதிய போட்டி, டெல்லியில் நடந்தது. டாஸ் வென்ற  பெங்களூரு அணி,  டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்  35 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். ரிஷாப் பண்ட்  வழக்கம்போல் அதிரடியாய் ஆடி, 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 181 ரன்கள்  எடுத்தது. 

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்தீவ் படேல், மொயின் அலி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்த டி வில்லியர்ஸ்,  டெல்லி அணியினரின் பந்து வீச்சை சிதறடித்தனர். 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலி அவுட் ஆனார். எனினும் மறுமுனையில் வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் 19-ஓவரில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. 

இந்தூரில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணியை,  31 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 245 ரன்கள் எடுத்தது. சுனில் நரைன் 75 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 ரன்களும் குவித்தனர்.  இதனை தொடர்ந்து, 246 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் ஆட துவங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வி கண்டது.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

பெண் ஊடகவியலாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்து

கர்நாடகா முதலமைச்சராக குமாரசாமி நாளை அரியணை ஏறவுள்ள நிலையில்,

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ்

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)