முகப்பு > இந்தியா

​பாஜக கூட்டணி செத்துவிட்டது - சிவசேனா

September 04, 2017

​பாஜக கூட்டணி செத்துவிட்டது - சிவசேனாமத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவ சேனா கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இறந்துவிட்டதாக கூறியுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் சிவ சேனா கட்சிக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்றும், விரிவாக்கம் குறித்த தகவல் தங்களுக்கு வரவில்லை என்று அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவ சேனா மூத்த தலைவர்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி காகிதத்தின் மீது மட்டுமே இருப்பதாக சாடியுள்ளனர். மேலும், குடியரசு தலைவர் தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல்களின்போது மட்டும் பாஜகவுக்கு தாங்கள் தேவைப்படுவதாகவும் சிவ சேனா கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்