இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

சிலை கடத்தல் விசாரணையை, சிறப்பாக மேற்கொண்டார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்: பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்!

August 4, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15487 Views

சிலை கடத்தல் விசாரணையை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக மேற்கொண்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அண்ணா பல்கலை முறைகேடு குறித்து தமக்கு முழுமையாக தெரியாது என்றும், துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் உதவி வழங்கியது, மனிதாபிமான நடவடிக்கை என்றும் கூறினார்.

சிலை கடத்தல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையா என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.  தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான விசாரணையை, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பல அதிரடி நடவடிக்கைகளும் நடந்தேறின. இந்த நிலையில் அரசுக்கும், விசாரணை குழுவிற்குமான மோதல் அதிகரித்துள்ளது.

கடத்தப்பட்ட, ராஜராஜசோழன் சிலையை குஜராத்தில் இருந்து மீட்டு வந்து அசத்தினார் பொன்.மாணிக்கவேல். ஆயினும் பொன் மாணிக்கவேல் மற்றும் தமிழக அரசு நடுவே, கடுமையான மோதல் போக்கு அதிகரித்து வந்தது. பொன். மாணிக்கவேலை பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசு முயற்சித்தபோது அவர்தான் அந்த பணியிடத்தில் நீடிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி மகாதேவன் உறுதியாக தெரிவித்து விட்டார்

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )