பீகாரில் தனிப்பெரும் கட்சி ஆர்ஜெடி: நாங்கள் ஏன் ஆட்சியமைக்க கூடாது - தேஜஷ்வி கேள்வி | "Single Largest Is All? Why Not Our Party": Tejashwi | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

பீகாரில் தனிப்பெரும் கட்சி ஆர்ஜெடி: நாங்கள் ஏன் ஆட்சியமைக்க கூடாது - தேஜஷ்வி கேள்வி

May 17, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2357 Views


கர்நாடகாவில் ஏற்பட்ட அதிரடி அரசியல் திருப்பங்கள் பீகாரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிக இடங்களை வென்ற கட்சி என்கிற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு பீகார் ஆளுநரை நாளை சந்தித்து உரிமை கோரப்போவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் அதிகபட்சமாக 80 இடங்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனதா தளம் 70 இடங்களையும், பாஜக 53 இடங்களையும் கைப்பற்றின. முதலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து வந்த நிலையில் பின்னர் அக்கூட்டணி முறிந்து பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. 

தற்போது கர்நாடக மாநிலத்தில் அதிக இடங்களில் வென்றுள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் அதிக இடங்களில் வென்றுள்ள தாங்கள் ஏன்? பீகாரில் ஆட்சி அமைக்க உரிமைகோரக் கூடாது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )