இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கோவாவில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ்!

May 17, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1945 Views

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைவதை தடுக்கும் காங்கிரஸின்  முயற்சி ஆளுநரின் முடிவால் தடுக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக கோவாவில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது.  

கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸ் வென்றது. 13 இடங்களில் பாஜக வென்றது. மொத்தம் 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில் 13 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. 

அதிக இடங்களை வென்ற கட்சியாக இருந்தாலும் கோவாவில் காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் அதிக இடங்களில் வென்ற கட்சி என்கிற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததால் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் முயற்சி தடைபட்டுள்ளது. எனவே இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் அதிக இடங்களில் வென்ற கட்சி என்கிற அடிப்படையில் கோவாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. 

அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக உள்ள தமிழகத்தை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் நாளை கோவா தலைநகர் பானாஜி செல்கிறார். அவருடன் இணைந்து கோவா காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். 

இதனை நியூஸ்7 தமிழிடம் உறுதிப்படுத்திய டாக்டர் செல்லக்குமார், ஆளுநர்கள் மத்திய பாஜக அரசின் உத்தரவுபடி ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் பாரபட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )