முகப்பு > இந்தியா

​’குஜராத் மாதிரி’வெற்றி - பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - அமித் ஷா கோரிக்கை!

September 11, 2017

​’குஜராத் மாதிரி’வெற்றி - பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - அமித் ஷா கோரிக்கை!பாஜகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் நடத்தப்படும் பிரச்சாரத்தை நம்பவேண்டாம் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள குஜராத் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குஜராத்தில் என்ன நிலைமை, இப்போது என்ன நிலைமை என அறிந்துகொண்டு ‘குஜராத் மாதிரி வளர்ச்சியை’ விமர்சிக்க வேண்டும் என்றும், வெறுமனே பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நம்பவேண்டாம் என்றும் அமித் ஷா கோரிக்கை வைத்தார். 

பாஜக 1995ல் குஜராத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்ததாகவும், அதற்கு முன்பாக 15 மணிநேர மின்வெட்டு இருந்த குஜராத்தில் தற்போது 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுவதாகவும் அமித் ஷா பெருமையுடன் குறிப்பிட்டார்.

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அமித் ஷா வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் வருவாயை பெருக்குவதே நோக்கம் என்றும் குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னதாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.6 கோடி ஆக இருந்ததாகவும், பணமதிப்பிழப்புக்கு பிறகு அது 6.3 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, முதலில் கறுப்பு பண ஒழிப்பு, பிறகு போலி நோட்டு ஒழிப்பு, பிறகு ரொக்கமில்லா பரிவர்த்தனை ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்