இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

'அண்ணா மலிவு விலை உணவகம்' என்ற பெயரில் ஆந்திராவிற்கும் பரவிய அம்மா உணவகம்!

July 11, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2221 Views

தமிழகத்தைப் போல் ஆந்திர மாநிலத்திலும் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 'அம்மா உணவகம்' என்ற பெயரில், மலிவு விலை உணவகம் செயல்பட்டு வரும் நிலையில், ஆந்திராவில் 'அண்ணா உணவகம்' என்ற பெயரில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. 

விஜயவாடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். இந்த உணவகத்தில் காலை, பிற்பகல், இரவு என 3 வேளைகளிலும் தலா 5 ரூபாய்க்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. காலையில் சாம்பார் இட்லி, பிற்பகலில் சாதம், பருப்பு, சாம்பார், தயிர் ஆகியவை வழங்கப்பட உள்ளன. 

காலை உணவில் 3 இட்லி/ 3 பூரி/ உப்புமா மற்றும் பொங்கல், மத்தியம் மற்றும் இரவு உணவாக மீல்ஸ், தாள், மற்றும் சாம்பார் சாதம், தயிர்ச் சாதம் அதனுடன் ஊறுகாய் மற்றும் கூட்டு பொரியல் உணவு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆந்திர அரசு அண்ணா உணவகங்களை மாநிலத்தின் 110 நகராட்சிகளில் திறக்க முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக 60 உணவகங்களை 25 நகராட்சிகளில் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் மாதத்தில் 85 நகராட்சிகளில் 143 கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. 

மறந்த தெலுங்கு தேச நிறுவனர் நந்தமூரி தாரகா ராமா ராவ் ஏழைகளுக்கு 2 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திருந்தார், அதன்பின்பு தற்போது சந்திரபாபு நாயுடு அண்ணா உணவக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் திட்டத்தின் மூலம் ஆந்திர ஏழை மக்களுக்கு 15 ரூபாய்க்கு முன்று வேளைத் தரமான உணவு கிடைக்கும் என நகர நிர்வாகம் மற்றும்  மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.நாராயண தெரிவித்துள்ளார் 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )