இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

தாஜ்மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா? - உச்சநீதிமன்றம் காட்டம்!

July 11, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1862 Views

தாஜ்மஹாலை பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா? என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. 

தாஜ்மஹாலை முழுமையாக பராமரிக்கவும், தாஜ்மஹாலை சுற்றி இருக்கும் தோல் தொழிற்சாலைகளை  மூட உத்தரவிட கோரியும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் மதன்.பி.லோக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் தாஜ்மஹாலை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் தொழிற்சாலைகள் விரிவாக்கம் அடைந்து வருவதாகவும், ஆனால் அது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதிகள், தாஜ்மஹாலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக மத்திய அரசுக்கு  கண்டனம் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளின் மெத்தன போக்கே தாஜ்மஹால் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம் என அதிருப்தி தெரிவித்ததோடு, இதுதொடர்பாக தாஜ்மஹால் பாதுகாப்பு மண்டல தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது

உத்தரபிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )