இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

13,000 ரயில்வே ஊழியர்கள் பணிநீக்கம் - ரயில்வே அமைச்சகம் அதிரடி!

February 11, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4401 Views

ரயில்வே துறையில் அனுமதியின்றி நீண்ட நாட்கள் விடுப்பில் இருக்கும் 13,000 ஊழியர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வேயில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் நாளொன்றுக்கு 12,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 7,000 ரயில்கள் பயணிகள் ரயில்களாகும். இதன்மூலம் நாளொன்றுக்கு 2.3 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நிர்வாகம் என்ற பெருமையை இந்திய ரயில்வே பெற்றுள்ளது.

இதேபோல் உலகளாவிய அளவில் இந்திய ரயில்வே 2-வது இடத்தில் உள்ளது. எனினும், ரயில் சேவையில் காலதாமதம், ரயில் நிலையங்களில் சுகாதாரமின்மை என பல்வேறு குறைபாடுகள் நீண்ட காலமாக தொடர்கின்றன. 10 ரயில்களில் 4 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாக அண்மையில் வெளியான ரயில்வே புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

மேலும், போதிய ஊழியர்கள் இல்லாததே இந்த குறைபாடுகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான  ரயில்வே மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ரயில்வே ஊழியர்களில் 10 சதவீதம் பேர் தொடர் விடுப்பில் இருப்பதாக தெரியவந்தது.

இந்த பின்னணியில் ரயில்வே துறையின் புதிய அமைச்சராக பியூஷ் கோயல் கடந்த ஆண்டு செப்டம்பர்  3-ம் தேதி பதவியேற்றார். ஊழியர்  வருவகைப் பதிவேடு விவகாரத்தை அவர் மேலும், தீவிரப்படுத்தினார்.அதன்படி நாடு முழுவதும் உரிய அனுமதியின்றி நீண்ட விடுப்பில் இருக்கும் 13,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள்  அனைவரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.அவர்களில் பொரும்பாலானோர் ரயில்வே துறையின் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

Categories: இந்தியா
Image
Image தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் பைக்கை

வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து 6 நாட்களுக்கு திருப்பதி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பாலியல் இச்சைக்கு இணங்காத

கர்நாடகாவில் நல்லாட்சியை கொடுக்க கால அவகாசம் தராமல் என்னை

தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.93 /Ltr (₹ 0.06 )
  • டீசல்
    ₹ 72.48 /Ltr (₹ 0.05 )